உள்ளூர் செய்திகள்

கைதான ஊழியர்கள்.

லிப்ட் கம்பெனியில் திருடிய 2 ஊழியர்கள் கைது

Published On 2022-12-21 13:23 IST   |   Update On 2022-12-21 13:23:00 IST
  • மதுரையில் லிப்ட் கம்பெனியில் திருடிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • ரூ.1 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி கட்டி ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

மதுரை

சிவகங்கை மாவட்டம் கீழடி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (31). இவர் சிந்தாமணி விநாயகர் தெருவில் லிப்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் இந்த நிறுவனத்தின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி கட்டி ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். லிப்ட் நிறுவ னத்தில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்க ளிடமும் கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் வேலை பார்த்த 2 பேர் திடீரென்று தலைமறைவாகி விட்டனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரையும் சுற்றி பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்களிடம் இருந்து ரூ.33 ஆயிரம் மற்றும் வெள்ளி கட்டி ஆகியவை கைப்பற்றப்பட்டது. அவர்கள் மேல அனுப்பா னடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஜனா (20), பாஸ்கரன் மகன் நந்தகுமார் (20) என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து கீரைத்துறை போலீசார் லிப்ட் நிறுவன ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News