உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே 14 ஆடுகள் மர்மச்சாவு

Published On 2023-02-10 14:46 IST   |   Update On 2023-02-10 14:46:00 IST
  • திருமங்கலம் அருகே 14 ஆடுகள் மர்மமான முறையில் இறந்தன.
  • தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.கோபாலபுரத்தை சேர்ந்தவர் மார்கழி வாசகன் (வயது41). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் வெள்ளாடுகளையும் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் தனது 43-க்கும் மேற்பட்ட ஆடுகளை சம்பவத்தன்று தனது வீட்டு அருகே உள்ள கொட்டத்தில் அடைத்துள்ளார். அங்கு ஆடுகளுக்கு கழனி தண்ணீர் வைத்துள்ளனர். கழனி தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் 14 ஆண்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி இறந்துவிட்டது

இதனால் அதிர்ச்சியடைந்த மார்கழிவாசகன் இச்சம்பவம் குறித்து வில்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆடுகள் எப்படி இறந்தது? தண்ணீரில் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News