உள்ளூர் செய்திகள்
மீனாட்சி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
- குலசேகரன் கோட்டை மீனாட்சி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே உள்ள குலசேகரன்கோட்டை சிறுமலை அடிவார ஓடைக்கரையில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. அதன் 48-வது நாள் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. கார்த்திக் பட்டர் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜை செய்து மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.