உள்ளூர் செய்திகள்

 தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் நிர்வாகிகள், அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பூங்கொத்து கொடுத்தனர்.

முதல்-அமைச்சருக்கு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் பாராட்டு

Published On 2023-04-19 09:52 GMT   |   Update On 2023-04-19 09:52 GMT
  • ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கியதற்கு முதல்-அமைச்சருக்கு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
  • தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநாடு மதுரையில் நடந்தது.

மதுரை

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநாடு மதுரையில் நடந்தது. இதில் கடந்த 2020-ம் ஆண்டு ஊதிய உயர்வு போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக பணியில் இருந்து நீக்கப் பட்ட 10 பேருக்கு தமிழக அரசு மீண்டும் வேலை வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில தி.மு.க மருத்துவ அணி செயலாளர் எழிலன், நாகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது விபத்தில் இறந்த டிரைவர் வெங்கடேசன் குடும்பத் திற்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழ் நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இருளாண்டி தலைமையில் நிர்வாகிகள், சென்னைக்கு சென்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்தனர். அப்போது மானிய கோரிக்கைக்கு நன்றி தெரிவித்து, நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News