உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

மழை இல்லாததால் 49 அடிக்கும் கீழ் குறைந்த வைகை அணை நீர்மட்டம்

Published On 2023-08-02 05:23 GMT   |   Update On 2023-08-02 05:23 GMT
  • அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
  • முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்ய வில்லை. இதனால் அரசரடி, கண்டமனூர், வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்ததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. மேலும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்த ப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்று விட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 48.85 அடியாக சரிந்துள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.55 அடியாக உள்ளது. 294 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 74.09 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

Tags:    

Similar News