உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட செல்போன்களை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உரியவர்களிடம் ஒப்படைத்த காட்சி.


நெல்லையில் இதுவரை ரூ.25 லட்சம் மதிப்பிலான, தொலைந்து போன செல்போன்கள் மீட்பு - மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி

Published On 2022-12-13 15:17 IST   |   Update On 2022-12-13 15:17:00 IST
  • மாநகர பகுதியில் தொலைந்து போன செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகளில் சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
  • வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழந்த 40 பேரின் ரூ.49 லட்சம் மீட்கப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் தொலைந்து போன செல்போன்களை மீட்கும் நடவடிக்கைகளில் சைபர்கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அதன் பயனாக, தொலைந்து போன 100 செல்போன் மீட்கப்பட்டன.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் கலந்து கொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைந்தார்.

நிகழ்ச்சியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா மற்றும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

போலி ஆவணங்கள் ரத்து

நெல்லை மாநகர பகுதிகளில் நில மோசடி தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு ரூ.8 கோடியே 91 லட்சம் மதிப்பிலான சொத்துக்களின் போலி ஆவணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெல்லை மாநகர பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி இதுவரை ரூ.25 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பிலான செல்போன்கள் கைப்பற்ற ப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரூ.30 லட்சம் முடக்கம்

இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாகவும் டிரேடிங் ஆப் மூலமும் கே.ஒய்.சி. அப்டேட் பரிசு கூப்பன் உள்ளிட்டவைகள் மூலமும் மோசடி செய்யப்பட்டு வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை இழந்த 40 பேரின் ரூ.49 லட்சம் மீட்கப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலமாக பண மோசடி புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு 15 பேர்களிடமிருந்து மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கில் ரூ. 32 லட்சம் பணம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News