சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிக்கு பரிசு வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
உடன்குடி வீரவாகுபுரத்தில் கால்நடை சிறப்பு முகாம்
- உடன்குடி அருகே சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
- உதவி மருத்துவர் சத்யா கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள சீர்காட்சி ஊராட்சி வீரவாகுபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய குழு தலைவர் பாலசிங் தலைமை தாங்கி முகாமை தொடங்கிவைத்தார். கால்நடை பராமரிப்பு துறை திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் மரு. செல்வகுமார் சிறப்புரையாற்றி சிறந்த கன்று மற்றும் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிக்கு விருது வழங்கினார். உடன்குடி கால்நடை உதவி மருத்துவர் சத்யா கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், கருவூட்டல், மடி நோய்க்கு சிகிச்சை அளித்தார். இம்முகாமில் வெறிநாய் தடுப்பூசியும் போடப்பட்டது. கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. சுமார் 240-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. சீர்காட்சி பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் ஜெயகிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர் செல்வராஜ், கால்நடை பராமரிப்பு உதவியாளர் வசந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.