கால்நடை தீவனப்பயிர் சாகுபடி பயிற்சி நடைபெற்ற காட்சி.
ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்துறை சார்பில் கால்நடை தீவனப்பயிர் சாகுபடி பயிற்சி
- தீவனப்பயிர் சாகுபடி முறைகள், விதை கரணை தேர்ந்தெடுத்தல், ரகங்கள், பராமரிப்பு முறைகள் மற்றும் கோழி, ஆடு, மாடு வளர்ப்பு முறைகள் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
- ராஜபதி கிராமத்தை சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் உழவர் நலத்துறையில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கால்நடை தீவன பயிர் சாகுபடி குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி அறிவுரையின்படி ராஜபதி கிராமத்தில் நடைபெற்றது.
ராஜபதி ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் தீவனப்பயிர் சாகுபடி முறைகள், விதை கரணை தேர்ந்தெடுத்தல், ரகங்கள், பராமரிப்பு முறைகள் மற்றும் கோழி, ஆடு, மாடு வளர்ப்பு முறைகள் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.
கால்நடை உதவி மருத்துவர் வினோதினி கால்நடை பராமரிப்பு துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
சீனிவாச சேவை அறக்கட்டளை களப்பணியாளர்கள் கால்நடைகளின் மூலம் கிடைக்கும் பொருட்களின் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜலட்சுமி மற்றும் மாரியப்பன் ஆகியோர் செய்து இருந்தனர். ராஜபதி கிராமத்தை சேர்ந்த சுமார் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.