உள்ளூர் செய்திகள்

தமிழக, கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் சென்று வணங்கும் மாதேஸ்வரன் மலை கோவிலில் புலியின் மீது மாதேஸ்வர சாமி அமர்ந்துள்ள பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று திறந்துவைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புலியின்மீது அமர்ந்திருப்பது போன்றுமாதேஸ்வரன் மலை கோவிலில் பிரமாண்டமான சிவன் சிலை

Published On 2023-03-18 09:52 GMT   |   Update On 2023-03-18 09:52 GMT
  • மாதேஸ்வர மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் சாமி கோவில் மிகவும் புகழ் பெற்ற வழிபாட்டுதலங்களில் ஒன்றாகும்.
  • தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.

மேட்டூர்:

கர்நாடக மாநிலம் மாதேஸ்வர மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் சாமி கோவில் மிகவும் புகழ் பெற்ற வழிபாட்டுதலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம் .

தசரா , சிவன் ராத்திரி போன்ற முக்கியமான திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சென்று வருவார்கள். இந்த கோவிலில் புலியின் மீது மாதேஸ்வர சாமி அமர்ந்துள்ளது போல் ரூ 20 கோடி மதிப்பீட்டில் சாமி சிலை வடிவ மைக்கப்பட்டு ள்ளது. இது மட்டுமின்றி 250 கிலோ எடையுள்ள வெள்ளி ரதம் புதிதாக உருவாக்கப்பட்டு ள்ளது.

இதை கர்நாடக முதல்-மந்திரி பசுவராஜ் பொம்மை இன்று திறந்து வைத்தார். இதற்காக தனி ஹெலிகாப்டர் மூலம் மாதேஸ்வரன்மலைக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கபப்ட்டது.

நிகழ்ச்சி யில் கர்நாடகா மந்திரிகள், அரசு அதிகாரிகள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News