மத்தூர் கிளை நூலகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு நூலகம் சார்ந்த பயிற்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவிகளை படத்தில் காணலாம்.
மாணவிகளுக்கு நூலகம் சார்ந்த பயிற்சி
- நூலக செயல்பாடுகள் விழிப்புணர்வுகளை நல் நூலகர் முருகேசன் பயிற்சி அளித்தார்.
- போட்டித் தேர்வுகளில் சவால்களை எதிர்கொள்ள நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி விவரித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட நூலக அலுவலர் வழிகாட்டுதலின்படி போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் கிளை நூலகத்தில் ஊத்தங்கரை அதியமான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நூலகம் சார்ந்த பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவாக கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் காளி தாஸ் ஓய்வு மற்றும் கோடக் மகேந்திரா வங்கி மேலாளர் தமிழரசன் வரவேற்று போட்டித் தேர்வுக்கு நூலகத்தின் பங்கு என்ற தலைப்பில் பேசி மாணவிகளை வரவேற்றனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற நிகழ்வுகளில் நூலகத்தின் உடைய தோற்றம் நூலகத்தின் பாதுகாப்பு நூல்கள் வாய்ப்பாடு, நூலகங்களில் உறுப்பினராக சேர்த்தல் நீக்குதல், கன்னிமாரா நூலகம் அண்ணா நூற்றாண்டு நூலகம், சரஸ்வதி மஹால் நூலகம், ஓலைச்சுவடிகள் நடமாடும் நூலகங்கள் நூலகங்களின் வகைகள் என்ற நூலக செயல்பாடுகள் விழிப்புணர்வுகளை நல் நூலகர் முருகேசன் பயிற்சி அளித்தார்.
பயிற்சியின் போது கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் தமிழ் பல்கலை கழக உறுப்பினர் சவீதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் சவால்களை எதிர்கொள்ள நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி விவரித்தனர்.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் கவுதமி தமிழ் இலக்கியங்கள் மற்றும் வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கியதோடு 30 கல்லூரி மாணவிகளுக்கு உறுப்பினராக சேர்த்துக்கொள்ள அதற்குண்டான தொகையை வழங்கி சிறப்பித்தார். இந்த நூலக பயிற்சி ஏற்பாடுகளை மத்தூர் கிளை நூலகர் முருகேசன் ஏற்பாடு செய்து சிறப்பித்தார்.