உள்ளூர் செய்திகள்

சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறையினர் பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு

Published On 2023-10-07 15:14 IST   |   Update On 2023-10-07 15:14:00 IST
  • தேன்கனிக்கோட்டை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • தானியங்கி கேமராக்கள் வைத்து கண்காணிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தண்டரை ஊராட் சிக்கு உட்பட்டது இஸ்லாம் பூர் கிராமம். இந்த கிரா மத்தின் அருகில் சன்னத்து ஓடை என்ற இடம் உள்ளது. இதன் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை ஒன்று தாக்கி ஒரு ஆட்டை கடந்த சில நாட்க ளுக்கு முன்பு இழுத்து சென்றது.

இதை யடுத்து தேன்க னிக்கோட்டை வனச்சரக அலுவலர் விஜயன் தலை மையிலான வன குழுவினர் அந்த இடத்தை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கு தடயங்கள் உள்ளதா என பார்த்தனர். அதில் சிறுத்தையின் கால் தடயங்கள் கண்டறி யப்பட்டன.

இதையடுத்து ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்தை பார்வை யிட்டு தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள் ளவும், சுற்று வட்டார கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும் வனத்துறை யினருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து ஓசூர் வன கோட்ட உதவி வன பாது காவலர் ராஜமாரியப்பன் தலைமையில் வன குழுவி னர் சம்பவ இடத்தை கண்கா ணித்து வந்தனர். இந்த நிலையில் சிறுதை யின் நடமாட்டத்தை கண்கா ணிக்க தானியங்கி கேமராக் கள் பொருத்த பட்டு கண்கா ணிக்கப்பட்டன.

அதில் தானியங்கி கேமரா வில் சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. இந்த சிறுத்தை தற்போது தேன்கனிக்கோட்டை காப்பு காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள து. இதன் அருகில் சாமிபுரம், அடவிசாமிபுரம், அடைக்கல புரம், தண்டரை, இஸ்லாம் பூர், பண்டேஸ்வரம், பே லூர், எண்ணேஸ்வ ரமடம், பென்னங்கூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள், தொழிற்சா லைகள், குடியிருப்புகள் அமைந்துள்ளன.

ஆகவே அந்த பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகிறார்கள். மேலும் வருவாய்த்துறையி னரும், காவல் துறையினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகை யில், பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டின் வெளி யில் மின் விளக்கு களை ஒளிர செய்ய வேண்டும். சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தேன்கனிக்கோட்டை வன சரக அலுவலர் 97870 96753 மற்றும் அய்யூர் வனவர் 82482 61278 ஆகிய எண்க ளில் தொடர்பு கொள்ளலாம். என தெரிவித்துள்ளனர்.

Similar News