உள்ளூர் செய்திகள்

மசினகுடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை

Published On 2023-07-26 14:29 IST   |   Update On 2023-07-26 14:29:00 IST
  • இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • சிறுத்தை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு உள்ள மசினகுடி கோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர்.

அப்போது சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட மசினகுடி -ஊட்டி சாலை ரோட்டில் துர்நாற்றம் வீசியது. எனவே வனத்துறையினர் வாழைத்தோட்டம் பிரிவில் சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு உள்ள ஒரு பகுதியில் 6 வயதுடைய பெண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது. இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.ெதாடர்ந்து கால்நடை டாக்டர்கள் மூலம் சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.

பிரேத பரிசோதனையின் முடிவில் தான் அந்த சிறுத்தை எப்படி இறந்தது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். இருந்தபோதிலும் அது சக விலங்கு தாக்கியதால் படு காயம் அடைந்து இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News