உள்ளூர் செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்டு ஒப்படைப்பு பணி நடைபெற்ற போது எடுத்த படம்.


சிவகிரி அருகே கோவிலுக்கு சொந்தமான இடம் மீட்டு ஒப்படைப்பு

Published On 2022-09-15 09:11 GMT   |   Update On 2022-09-15 09:11 GMT
  • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது
  • சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிவகிரி:

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தேவிபட்டணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலுக்கு அருகில் கிழக்குப் பக்கத்தில் மலை அடிவார பகுதியில் கோவிலுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 81 சென்ட் புன்செய் நிலம் உள்ளது. இது தொடர்பாக சிவகிரி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் எதிர்தரப்பு மேல்முறையீடு காலமும் முடிவுற்ற நிலையில் மேற்படி வழக்கு நடந்து வந்த இடத்தை கோவிலுக்கு ஒப்படைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி தலைமையில், தென்காசி நிலம் எடுப்பு தாசில்தார், செயல் அலுவலர்கள் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில் முருகன், கடையம் வில்வநாதன் சுவாமி கோவில் அசோக்குமார், வி.கே.புதூர் நவநீதகிருஷ்ணன் கோவில் முருகன், கிருஷ்ணாபுரம் கோபால கிருஷ்ணசுவாமி கோவில் கார்த்திக் லட்சுமி, ஆய்வாளர்கள் தென்காசி சரவணகுமார், ஆலங்குளம் சேதுராமன், சிவகிரி ஆர்.கே.நாச்சியார் கட்டளை நிர்வாக அலுவலர் ஜெகநாதன், கணக்கர் குமார், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார், வி.ஏ.ஓ. அன்புச்செல்வி, தலையாரி முத்துசாமி, சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ், சிவகிரி அளவையாளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News