குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட குழிகளை படத்தில் காணலாம்.
பாலக்கோடு பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைப்பதில் மெத்தனம் : பொதுமக்கள் அவதி
- ரூ. 5 கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான பணிகள் தொடங்கியது.
- முதியவர்கள் அடிக்கடி குழியில் விழுந்து விபத்து ஏற்படடு வருகிறது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி 18 வார்டு களிலும் பொது மக்களின் நலன் கருதி மத்தி ஜல்சக்கி திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குடிநீர் வழங்க கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 5 கோடி 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான பணிகள் துவங்கின.
தற்போது வரை குடிநீர் குழாய் பதிக்க தோண்ட ப்பட்ட குழிகள் பெரும்பா லும் மூடப்ப டாமலும் திறந்த வெளியில் காணப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என அடிக்கடி குழியில் விழுந்து விபத்து ஏற்படடு வருகிறது.
மேலும் பாலக்கோடு 11-வது வார்டு அல்லா கோவிலுக்கு செல்லும் தெருவில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பு குழியை உடனடியாக மூட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.