உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சாவு

Published On 2023-09-29 15:33 IST   |   Update On 2023-09-29 15:33:00 IST
  • பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
  • கேபிள் வயரை சரி செய்தபோது சம்பவம்

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சீரியனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 50). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டிவி உரிமையாளரிடம் கூலி வேலை செய்து வந்தார்,

இந்நிலையில் நல்லூர் கிராமத்தில் வேப்பமரத்தில் சிக்கி கேபிள் ஒயர் அறுந்து விட்டதாக தகவல் வந்தது. இதனை அடுத்து அதனை சரிசெய்ய ரகுபதி சென்றார். அப்போது வேப்பமரத்தில் ஏறி கேபிள் ஒயரை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே ரகுபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News