உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
திண்டுக்கல் அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அம்மையநாயக்கனூர் அம்மாபட்டியை சேர்ந்தவர் ஜான்கென்னடி (வயது 49). இவருக்கு ஆரோக்கிய மேரி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டது போல் ஜான்கென்னடி சுற்றித்திரிந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை கொடைரோடு அருகே தண்டவாளத்தில் கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.