உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

குரும்பப்பட்டி காப்புக் காட்டில்முயல் வேட்டையாடிய 2 பேர் கைது

Published On 2023-02-20 09:31 GMT   |   Update On 2023-02-20 09:31 GMT
  • சேலம் மாவட்ட வன அலுவலர் குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு ரோந்து பணி ஈடுபட்டனர்.
  • அப்போது, காப்பு காட்டில் 2 பேர் வேட்டையாட பதுங்கி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

சேலம்:

சேலம் மாவட்ட வன அலுவலர் சசாங் கசியப் ரவி உத்தரவின் பேரில், வனசரக அலுவலர் முரளிதரன் தலைமையில் வனவர் பழனிவேல், வனக்காப்பாளர்கள் அசோக்குமார், அருண்குமார், செல்வசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர், குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு ரோந்து பணி ஈடுபட்டனர்.

அப்போது, காப்பு காட்டில் 2 பேர் வேட்டையாட பதுங்கி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், விசாரணை செய்ததில், அவர்கள் சங்கர் (வயது 29), பச்சியப்பன் (51) என்பது தெரியவந்தது.

இருவரும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கன்னி வலைகளை பயன்படுத்தி புள்ளிமான், முயல், காட்டுப்பூனை போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 6-ல் நீதிபதி முன்பு அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News