உள்ளூர் செய்திகள்

கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

வனதுர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-26 09:44 GMT   |   Update On 2023-06-26 09:44 GMT
  • கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
  • மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.

தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.

பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் வெங்கடேச குருக்கள் தலைமையில் சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

தொடர்ந்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர், சிங்கப்பூர் தொழிலாளர் சபா பவுர்ணமி குழுயாக பூஜை தலைவர் துரை அரசன், தொழிலதிபர்கள்சிங்கப்பூர் சபாரெத்தினம், தோப்புத்துறை ஆரிபா, இந்து நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், வீரராசு கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம்முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம், இந்து நற்பணி மன்றத்தினர், தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News