உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றபடுவதை படத்தில் காணலாம்.


மஞ்சள்பரப்பு காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-11 05:11 GMT   |   Update On 2023-09-11 05:11 GMT
  • மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் தோரண பூஜை, சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை ஆசிரியர்களுக்கு ரக்சாபந்தனம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தொடர்ந்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி மஞ்சள்பரப்பு மலைகிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் விநாயகர் அனுக்கை, கிராம தேவதைகள் அனுக்கை, சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் தோரண பூஜை, சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை ஆசிரியர்களுக்கு ரக்சாபந்தனம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு மேல் காளியம்மன் மற்றும் சிம்ம வாகனத்திற்கும் யந்திர பிரதிஷ்ட்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்று நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் திருப்பள்ளியெழுச்சி, விநாயகர் பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், கருடாழ்வார் வழிபாடு, கணபதி ஹோமம், சண்முக சடாட்சர ஹோமம், ருத்ர ஹோமம், நவசக்தி ஹோமம் மற்றும் 3ம் கால மகா பூர்ணாகுதி வேதபாராயணம் பஞ்சபுராணம் மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் யாகசாலை யில் நாடி சந்தானம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

அதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி யளித்த காளியம்மனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் காளியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று சூரிய ராஜ் ஓடையில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை என்.பி.ஆர்., பி.கே.டி. பங்காளிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News