உள்ளூர் செய்திகள்

ஒலம்பஸ் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-08-19 15:08 IST   |   Update On 2023-08-19 15:08:00 IST
  • காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு நான்காம் வேள்வி நடக்கிறது.
  • கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் கனகராஜ், தக்கார் ராஜேஷ் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

கோவை,

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியிலுள்ள சித்தி விநாயகர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

முன்னதாக காலை 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு நான்காம் வேள்வி நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு விமான கலசத்துக்கும், 8.30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கும் திருக்குட நன்னீராட்டு (கும்பாபிஷேகம்) நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து காலை 8.45 மணிக்கு குரு மகா சன்னிதானங்கள் சிரவை ஆதினம் குமரகுருபரசாமிகள், பேரூர் ஆதினம் சாந்தலிங்க அடிகளார் ஆகியோர் அருளாசி வழங்குகின்றனர்.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் கனகராஜ், தக்கார் ராஜேஷ் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News