கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மணக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
- பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு அடுத்த மணக்குடியில் உலகநாயகி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹுதி நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, தான்தோன்றீஸ்வரர், உலகநாயகி அம்பாள், விநாயகர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.