உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காருக்குடி மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-02-12 07:12 GMT   |   Update On 2023-02-12 07:12 GMT
  • நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைபெற்றது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருக்குடியில் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் மகாகும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், தன பூஜை, பூர்வாங்க பூஜைகளுடன் பூர்ணாஹுதி தீபாரதனை நடைப்பெற்றது.

பின்னர் வாஸ்து சாந்தி, லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் யாகசாலை பூஜை நிறைவுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.

சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து, பரிவார தெய்வங்களான பேச்சியம்மன், கருப்பண்ணசாமி, காத்தவராயன், பட்டாணி ஐய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News