உள்ளூர் செய்திகள்

கடம் புறப்பாடு நடந்தது. பின், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

காளகஸ்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2023-09-11 15:03 IST   |   Update On 2023-09-11 15:03:00 IST
  • 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் (மேற்கு பார்த்த சிவன்) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.

தொடர்ந்து, நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரி யார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெ ற்றது.

நிகழ்ச்சியில் திருப்பணி குழு தலைவர் ராஜேந்திரன், அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், தொழி லதிபர் பிரபு, கோவில் நிர்வாகி விஜயராகவன், கடின ல்வயல் பங்குதந்தை நித்திய சகாயராஜ், தோப்புதுறை ஜமாத் மன்ற தலைவர் ஷாபி, முன்னாள் ஜமாத் மன்ற தலைவர் ஜபருல்லாகான் மற்றும் ஜமாத் மன்ற நிர்வாகிகள், கருப்ப ம்புலம் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News