உள்ளூர் செய்திகள்

கடம்பூர் ராஜகணபதி கோவிலில் கும்பாபிஷேகம்

Published On 2023-08-29 08:57 GMT   |   Update On 2023-08-29 08:57 GMT
  • கடந்த 41 நாட்கள் சிறப்பு பூஜையுடன் பல்வேறு யாகங்கள், வேள்விகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.
  • தொடர்ந்து காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் ராஜகணபதி பிள்ளை யார் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு பூமி பூஜையுடன் தொடங்கி கட்டி முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 41 நாட்கள் சிறப்பு பூஜையுடன் பல்வேறு யாகங்கள், வேல்விகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.சின்னப்பன், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வ குமார், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை இணைசெயலாளர் நீலகண்டன், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News