உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் சரயு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், மதியழகன் உள்பட பலர் உள்ளனர்.

கிருஷ்ணகிரி பயனாளிகளுக்கு ரூ.6.50 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-07-13 15:19 IST   |   Update On 2023-07-13 15:19:00 IST
  • 3 ஆயிரத்து 730 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 273 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு, எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் ஒய்.பிரகாஷ், பர்கூர் டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி கலந்து கொண்டு, 3 ஆயிரத்து 730 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 273 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கல்வி உதவி தொகை, நிவாரண நிதி, சாதி சான்றிதழ்கள், இலவச வட்டு மனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள், பயிர் கடன், வங்கி கடன், புதிய குடும்ப அட்டைகள் என பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து ஓசூர் வன உயிரின கோட்டம் சார்பில் பழங்குடியின இருளர் இன மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 29 சதவீத வனப்பரப்பில் 25 ஆயிரம் ஹெக்டேர் அளவில் உள்ள உண்ணிசெடிகளில் டேபிள், கட்டில் மற்றும் அலங்கார பொருட்கள் உள்ளிட்ட பயனுள்ள மதிப்புக்கூட்டு பொருளாக தயாரிக்கப்படுள்ளதை அமைச்சர் பார்வையிட்டார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சக்கரபாணி, அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா , மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News