உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மசாமி கோவில் பிரம்மோற்சவ விழா

Published On 2023-05-29 15:07 IST   |   Update On 2023-05-29 15:43:00 IST
  • பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு சிம்ம வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன.
  • இரவு ஆஞ்சநேயர் வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடக்கிறது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில், 37-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி ஜூன் 8-ந் தேதி வரை வெகு விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி கடந்த 26-ந் மாலை மிருத்சங்கரஹணம்,

அங்குராற்பணம் ஆகியவை நடந்தன. 27-ந் தேதி காலை கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், பிரகார உற்சவம், இரவு அன்னபட்சி வாகனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன. நேற்று காலை 6 மணிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், இரவு சிம்ம வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடைபெற்றன.

தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவு ஆஞ்சநேயர் வாஹனத்தில் நரசிம்மர் நகர் வலமும் நடக்கிறது. தொடர்ந்து அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவில் சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. வரும் 31-ந் தேதி பகல் 10.30 மணிக்கு நரசிம்மருக்கு திருக்கல்யாணமும், 11.30 மணிக்கு மாங்கல்யதாரணமும், அன்னதானமும், இரவு கருட வாகனத்தில் நகர் வலமும் நடக்கிறது.

Tags:    

Similar News