உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு மகளிர் பள்ளியில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம்

Published On 2022-11-25 15:02 IST   |   Update On 2022-11-25 15:02:00 IST
  • சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் மிஷன் இயற்கை செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • அரசின் விருது கிடைக்க பரிந்துரை செய்யப்படும். ஆசிரியர்கள் எதிர்காலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்டக் கல்வி அலுவலர் மணிமேகலை, தலைமை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி வரவேற்றார்.

பள்ளிகளில் தேசிய பசுமைப் படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் மிஷன் இயற்கை செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் ஆர்வத்துடன் செடிகளை நட்டு வைப்பது குறித்த விழிப்புணர்வை கார்ட்டூன் மூலம் விளக்கும் காணொளிக் காட்சி ஒளிபரப்பப்பட்டது.

இதில் 250 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசுகையில், சுற்றுச்சூழல் பணிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும், அரசின் விருது கிடைக்க பரிந்துரை செய்யப்படும். ஆசிரியர்கள் எதிர்காலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

ஓசூர் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.

Tags:    

Similar News