கிருஷ்ணகிரி, பர்கூரில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
- கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சார்பில், பழையபேட்டை நேதாஜி சாலையில், டி.எஸ்.பி., தமிழரசி கொடி அணிவகுப்பு ஊர்வலத்தைதொடங்கி வைத்தார்.
- பர்கூரில் நடந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை ஏடிஎஸ்பி., சங்கு துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி, பர்கூரில் விநாயகர் சதுர்த்திவிழாவை பொதுமக்கள் அச்சமின்றி கொண்டாட போலீசார்அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சார்பில், பழையபேட்டை நேதாஜி சாலையில், டி.எஸ்.பி., தமிழரசி கொடி அணிவகுப்பு ஊர்வலத்தைதொடங்கி வைத்தார்.
இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் டவுன் கபிலன், தாலுகா சரவணன், காவேரிப்பட்டணம் முரளி, குருபரப்பள்ளி சரவணன், மகாராஜகடை பிரகாஷ் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் உள்பட 75 பேர் கலந்து கொண்டனர்.
இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம், பழையபேட்டை, காந்திசாலை, ரவுண்டானா, பழைய சப்ஜெயில் சாலை வழியாக சென்று எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
இதே போல், பர்கூரில் நடந்த கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை ஏடிஎஸ்பி., சங்கு துவக்கி வைத்தார்.
இதில், பர்கூர் டி.எஸ்.பி., மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் பர்கூர் சவிதா, பாரூர் ராஜேஷ், போச்சம்பள்ளி பிரபாவதி, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமுதா மற்றும் நாகரசம்பட்டி, கந்திகுப்பம் போலீசார், பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கலந்து கொண்டனர்.
கொடி அணிவகுப்பு ஊர்வலம் பஸ் நிலையம் அருகில் தொடங்கி , திருப்பத்தூர் கூட் ரோடு அருகில் நிறைவடைந்தது.