உள்ளூர் செய்திகள்

நாளை கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளது. அதனை ஆர்வமுடன் பெண்கள் வாங்குவதை படத்தில் காணலாம்.

நாளை கிருஷ்ணர் ஜெயந்தி: கடலூர் பகுதியில் கண்ணன் சிலைகள் விற்பனை

Update: 2022-08-18 08:31 GMT
  • கோகுலாஷ்டமி பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
  • குறைந்த அளவிலே கிருஷ்ணர் சிலை விற்பனை ஆகிய வருவதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

கடலூர்:

ஆவணி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் கோகுலாஷ்டமி (ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில் கம்சனை கொல்ல கிருஷ்ணர் அவதரித்த நாளை பக்தர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாளை (19-ந்தேதி) கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொது மக்கள் கிருஷ்ணர் சிலையை கொலு வைத்து நைவேத்யங்கள் படைத்து வழிபடுகின்றனர்.வீடுகளில் கிருஷ்ணஜெயந்தி கொலு வைத்து விரதம் இருந்து கூட்டுபஜனையுடன் வழிபாட்டை செய்து வருகின்றனர். இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை ஓரங்களிலும் மற்றும் கடைகளிலும் அழகிய கண்ணன் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பக்தர்கள் அதனை விரும்பி வாங்கி செல்லும் வகையில் கண்ணை கவரும் கிருஷ்ணர் சிலைகள் விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர். தற்போது வழக்கத்தைவிட குறைந்த அளவிலே கிருஷ்ணர் சிலை விற்பனை ஆகிய வருவதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News