உள்ளூர் செய்திகள்
விழாவில் மாறுவேடம், நடன போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் பரிசுகள் வழங்கிய காட்சி.
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி
- பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் தலைமை தாங்கினார்கள்.
- மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளியின் நிறுவனர் அன்பரசன் மற்றும் தாளாளர் சங்கீதா அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். பள்ளி முதல்வர் ஷர்மிளா வரவேற்றார். விழாவில் மாணவ, மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, நடன போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளளர் பரிசுகளை வழங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மேலாளர் பூபேஷ் செய்திருந்தார்.