உள்ளூர் செய்திகள்

பெருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள்.

கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆண்டு பெருவிழா

Published On 2023-08-15 05:47 GMT   |   Update On 2023-08-15 05:47 GMT
  • புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது.
  • இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் வரலாற்றுச்சிறப்பு மிக்க புனித சலேத் அன்னை 157-ம் ஆண்டு புனிதப் பெருவிழா கடந்த மாதம் 30 - ஆம் தேதி கொடியேற்ற த்துடன் தொடங்கியது. கடந்த 10 - நாட்களுக்கு மேலாக ஒவ்வொரு நாளும் சலேத் அன்னைக்கு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

பாரிஸ் நகரில் லா சலேத் எனும் சிற்றூரில் காட்சி கொடுத்து 1886 -ஆம் ஆண்டு கொடைக்கானலில் சிருஷ்டிக்கப்பட்ட புனித சலேத் அன்னை திருத்தலத்தில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்டு மாதத்தில் 15 நாட்களுக்கு இங்கு சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெறும். பெருவிழா ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதியில் நிறைவுறும். அதன்படி உயர்மறை மாவட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பங்குத் தந்தைகள், பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலிகளை நிறைவேற்றினர்.

அதன் பின்னர் புனித சலேத் அன்னை ,காவல் தெய்வம், திருஇருதய ஆண்டவர்,புனித சூசையப்பர் ஆகிய திருஉருவங்களின் மின் அலங்கார தேர்பவனி செயின்ட் மேரீஸ் சாலையில் தொடங்கி பஸ் நிலையம், அண்ணா சாலை வழியாக மூஞ்சிக்கல் புனித இருதய ஆண்டவர் திருத்தலத்தை சென்றடைந்தது.இரவு முழுவதும் பவனி வந்த தேர் பவனி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டு புனித சலேத் அன்னையின் ஆசி பெற்று சென்றனர்.

Tags:    

Similar News