உள்ளூர் செய்திகள்

கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.(கோப்பு படம்)

கொடைக்கானலில் கன மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2023-03-24 13:26 IST   |   Update On 2023-03-24 13:26:00 IST
  • மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்தது.
  • மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் பகலில் வெயில் அடித்தபோதும் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் 1மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி, பியர்சோலா அருவி, பாம்பார்அருவி உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குளிர்கால சீசன் முடியும் நிலையில் தொடர்ந்து மழைப்பெய்து வருவதால் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு பிர ச்சினை ஏற்படாது.

எனினும் பேரிக்காய், பிளம்ஸ் பழங்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags:    

Similar News