பெண்ணுக்கு அடி-உதை; முதியவர் கைது
- பராசக்தி நகர் பங்களா தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
- ரத்தினம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. மேலும் அவரை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி கேட், பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 56). இவர் பராசக்தி நகர் பங்களா தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் காட்டில் வேலை செய்தபோது ஊஞ்சக்காடு ராமசாமி பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயவேல் (64) என்பவர் வீட்டின் விசேஷத்திற்காக வாழைத் தார்கள் பார்க்க வந்தார்.
அப்போது ரத்தினம்மாள் காட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் வாழைத் தார் ஏதும் பார்க்க வேண்டாம் என அவரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த நபர்
ரத்தினம்மாளை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. மேலும் அவரை கீழே தள்ளி விட்டதாக சொல்லப்படுகிறது. சத்தம் கேட்டு காட்டில் வேலை செய்யும் பெண்கள் அங்கு வருவதற்குள் அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார்.
இதில் படுகாயமடைந்த ரத்தினம்மாள் லைன்மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் பெண்களை துன்புறுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் ஜெயவேலை கைது செய்தனர்.