உள்ளூர் செய்திகள்

5 கிலோ கஞ்சாவுடன் கேரள வாலிபர் கைது

Update: 2022-07-02 12:07 GMT
  • ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று அதிரடி சோதனை நடத்தினர்.
  • சேலம் வழியாக சென்ற ரெயிலில் 5 கிலோ கஞ்சாவுடன் கேரள வாலிபர் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் ரெயில்வே சிறப்பு பிரிவு போலீசார் முத்துவேல், தமிழ்செல்வன், ஸ்ரீநாத் ஆகியோர் ரெயில்களில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாட்னா-எர்ணாகுளம் ரெயிலில் எஸ்-10 பெட்டியில் கறுப்புநிற பையில் 5 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் விஜயவாடா ரெயில் நிலையத்தில் ஏறிய பாலக்காடு மண்ணலூரை சேர்ந்த மாணிக்கம் மகன் பிரமோது(22) என்பவர் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News