உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டினம் மாரியம்மன் கோவிலில் ஊர் பண்டிகை நடைபெற்ற காட்சி.
காவேரிப்பட்டணம் மாரியம்மன், சாமுண்டி அம்மன் ஊர் பண்டிகை தொடக்கம்
- காவேரிப்பட்டினம் மாரியம்மன் கோவிலில் ஊர் பண்டிகை தொடங்கியது.
- பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் ஊர் பொதுமக்கள் பரம்பரை அறங்காவலர்கள் , கூம்பு எஜமானர்கள் சமூக சங்க தலைவர்கள் சார்பில் காவேரிப்பட்டினம் ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீ சாமுண்டி அம்மன் பண்டிகை கடந்த மாதம் 24-ந் தேதி முதல் சாட்டலுடன் தொடங்கியது. முதல் சாட்டல் விடுத்த 15 நாட்களுக்குள் காவேரிப்பட்டணம் பொதுமக்கள் வலசை சென்று வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது .
இரண்டாவது சாட்டல் நிகழ்ச்சியுடன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ சாமுண்டி அம்மன் வனத்திற்கு பானகம் கட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
ஏராளமான ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் காவேரிப்பட்டணத்தில் இருந்து சாமுண்டி அம்மன் வனத்திற்குச் சென்று பானகம் கட்டும் நிகழ்ச்சிக்கு சென்று வந்தனர்.