உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே கால்பந்து இறுதி போட்டியில் கட்டபெட்டு அணி வெற்றி

Published On 2023-06-20 15:34 IST   |   Update On 2023-06-20 15:34:00 IST
  • ஆட்டத்தில் யாரும் கோல் அடிக்காததால் டைப்ரைக்கர் முறையில் கட்டபெட்டு அணி வெற்றி பெற்றது.
  • இறுதி போட்டியில் கட்டபெட்டு அணியும் உயிலட்டி அணியும் மோதின.

 அரவேணு,

கோத்தகிரி அருகே கடைகம்பட்டியில் அஸ்வினி என்ற பெண்ணின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காக பாரதி இளைஞர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடந்த ஒரு வாரமாக நடந்தது. இதன் இறுதி போட்டியில் கட்டபெட்டு அணியும் உயிலட்டி அணியும் மோதின. ஆட்டத்தில் யாரும் கோல் அடிக்காததால் டைப்ரைக்கர் முறையில் கட்டபெட்டு அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகோப்பைகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஊர் தலைவர் ரமேஷ் வரவேற்றார். எட்டூர் தலைவர் ஹாலகவுடர் தலைமை வகித்தார். தலைவர் ராமாகவுடர், கம்பட்டி நாட்டாமை கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காவிலேரை பீமன், ஹில் போர்ட் தாளாளர் ரவிக்குமார், நீலகிரி மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் அஷ்ரப் அலி, ராம்சந்த் வியாபாரி சங்க தலைவர் லியாகத் அலி, கோத்திர வட்டார காங்கிரஸ் தலைவர் சில்லபாபு , மிளிதேன் பில்லன், சுண்டட்டி மணி, நெடுகுளா ஊராட்சி தலைவர் சுகுணா சிவா, துணை தலைவர் மனோகரன் , பெத்தளா விசு கவா அறக்கட்டளை கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் தலைவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News