உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணராயபுரம் அருகே இளம்பெண் திடீர் சாவு
- லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்,வீரியபாளையம் ஊராட்சி, வெள்ளைய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 38).கூலித்தொழிலாளி, இவரது மகள் திவ்யா பத்தாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திவ்யாவுக்கு நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் வீட்டில் வலிப்பு நோயால் துடித்துள்ளார். உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து லாலா பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.