உள்ளூர் செய்திகள்

அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்

Published On 2023-10-28 06:16 GMT   |   Update On 2023-10-28 06:16 GMT
  • அரவக்குறிச்சி அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சம் பறிமுதல்
  • லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

கரூர் 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள 20 ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நிலங்கள் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் திடீரென்று சார் பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்தனர்.

தொடர்ந்து அவர்கள் முன் வாயில் கதவை அடைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அலுவலகத்தில் சார்பதிவாளர் சக்திவேல் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளே இருந்தனர்.

இந்த சோதனையில் கக்கில் வராத ரூ.1.17 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள், பத்திர எழுத்தர்கள் உள்ளிடோரிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ரூ. 1,17,500 க்கு சரியான விளக்கம் அளிக்காததால் சார்பதிவாளர் சக்திவேலை கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகம் படி அறிவுறுத்திச் சென்றனர்.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கியுள்ள நிலையில், அரவக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News