உள்ளூர் செய்திகள்
- கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான்.
- தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர்,
கரூர் மாவட்டம், வாங்கல் குப்புச்சிப் பாளையம் பகுதியை சேர்ந்த சிறுவன் கரூர் அருகே காந்தி கிராமத்தில் உள்ள கேன்டில் டிரஸ்ட் காப்பகத்தில் கடந்த, 2022 முதல் தங்கியிருந்தான். இந்நிலையில் கடந்த, 6-ந்தேதி காப்பகத்தில் இருந்து வெளியே சென்ற அவன், திரும்பி வரவில்லை. இதுகுறித்து, காப்பகத்தின் இயக்குனர் தர்மராஜ், கொடுத்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.