உள்ளூர் செய்திகள்

வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-10-28 06:18 GMT   |   Update On 2023-10-28 06:18 GMT
  • கரூர் மின்னாம்பள்ளி குளக்கரை வன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கரூர் 

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, மின்னாம்பள்ளி கிராமத்தில் கொங்கு வெள்ளாள விளையன் குல மக்களின் குலதெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற குளக்கரை வன்னியம்மன் கோவில் உள்ளது.

இங்கு விநாயகர், கருப்பண்ண சுவாமி, மதுரை வீரன் உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதனை முன்னிட்டு முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை யாகசாலையில் வைத்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்னர் வன்னியம்மன் கோவில் கோபுர கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் உற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஒயிலாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,201 பேர் கலந்து கொண்ட கொங்கு ஒயிலாட்டம், ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி பெருஞ்சலங்கை ஆட்டம், உருமியாட்டம் போன்றவை நடந்தது.

இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என ஒரே வண்ணத்தில் ஆன பாரம்பரிய உடை அணிந்து புதிய உலக சாதனை படைத்தன.ர் அதற்காக டிஸ்கவர் வேல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News