உள்ளூர் செய்திகள்

பூக்களின் விலை உயர்வு

Published On 2023-09-15 07:04 GMT   |   Update On 2023-09-15 07:04 GMT
  • அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு
  • பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 வேலாயுதம்பாளையம்,  

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுப முகூர்த்த நாட்கள், கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ300-க்கு விற்பனையானது நேற்று 700 ரூபாய்க்கும், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 180 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 170 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 170 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையானது.சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News