உள்ளூர் செய்திகள்

திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-11-11 06:06 GMT   |   Update On 2023-11-11 06:06 GMT
  • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
  • 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலாயுதம்பாளையம் , 

கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் ,கந்தம்பாளையம், மூர்த்தி பாளையம்,நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பா ளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடு துறை, நன்செய் புகளூர்,புகழி மலை, காகித புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலை வழி யாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர். அதே போல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது . கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது.3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News