உள்ளூர் செய்திகள்

அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-07-17 11:36 IST   |   Update On 2023-07-17 11:36:00 IST
  • கரூர் அரசு மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
  • சட்டங்கள், திட்டங்கள் குறித்து விளக்க உரை

வே.பாளையம் ,

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான வுமன் ரெட்ரஸல் செல் " சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.முதுகலை 2-ஆம்ஆண்டு மாணவி சன்மதி வரவேற்றார். அன்னை ஸ்ரீ அரபிந்தோ கல்வி அறக்கட்டளை நிறுவனர் மலையப்பசாமி தலைமை வகித்தார். அறக்கட்டளை தலைவர் தங்கராசு, செயலாளர் டாக்டர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி முதல்வர் முனைவர் சாருமதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலாசுந்தரி கலந்து கொண்டு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் தொடர்பாக கருத்துகள் எடுத்துரைத்தார். மேலும் முதியோருக்கான பாதுகாப்பு திட்டங்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்பு அலுவலர், விரிவாக்க அலுவலர்களால் எடுத்துரைக்கப்பட்டன.181, 1098, முதலான எண்கள் குறித்த விளக்கங்களும் கொடுக்கப்பட்டன. மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வாழ்வில் தன்னம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர். .இவ்விழாவில் துணை முதல்வர், கலைப்புலத்தலைவர், பேராசிரியர்கள், மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வுமன் ரெட்ரஸல் செல் ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வானை, ராசாம்பாள் செய்திருந்தனர்.இளங்கலைத்தமிழ் 3-ஆம்ஆண்டு மாணவி சுஜிதா நன்றி கூறினார்.

Tags:    

Similar News