உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2023-10-31 14:22 IST   |   Update On 2023-10-31 14:22:00 IST
  • வீட்டில் வந்து பார்த்தபோது, மனைவி, குழந்தைகளை காணவில்லை.
  • தோகைமலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது

கரூர்

தோகைமலை, நாடக்காப்பட்டி காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 32). இவர் கொத்தனாராக பணிபுரிகிறார். இவரது மனைவி மீனா(27). இவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு சிவக்குமார், சஞ்சித்குமார் என இரு குழந்தைகள் உள்ளனர். கணவர் மாரியப்பன் திருச்சிக்கு கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டில் வந்து பார்த்தபோது, மனைவி, குழந்தைகளை காணவில்லை. மதியம், தோகைமலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறு விட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என தெரியவந்தது. தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News