உள்ளூர் செய்திகள்
- பாம்பு கடித்து பெண் பலியானார்
- ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது சம்பவம்
கரூர்:
குளித்தலையை அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு (வயது 40), விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (வயது 35). இவர், கடந்த 7ம் தேதி அய்யம்பாளையம் முருகேசன் என்பவரது சோளக்காட்டில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சோளத்தட்டையில் இருந்த பாம்பு, சசிகலா காலில் கடித்தது. இதையடுத்து, குளித்தலை அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். பிச்சைக்கண்ணு கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.