உள்ளூர் செய்திகள்
கரூரில் அகல்விளக்கு தீ சேலையில் பற்றி பெண் சாவு
- கரூரில் அகல்விளக்கு தீ சேலையில் பற்றி பெண் உயிரிழந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
திண்டுக்கல் மாவட்டம் கரிகாலியைச் சேர்ந்தவர் முத்துவடுகன் (வயது 53). இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்ட் ஆலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (52). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் பெண் ஒருவருடன் கரூர் மேட்டு தெருவில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அகல்விளக்கு எதிர்பாராத விதமாக இவரின் சேலையில் பற்றி தீயினால் மீனா தீக்காயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழிந்தார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின்படி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.