உள்ளூர் செய்திகள்

க.பரமத்தியில் கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-07-28 12:00 IST   |   Update On 2023-07-28 12:00:00 IST
  • க.பரமத்தியில் கால்நடை மருத்துவ முகாம் இளங்கோ எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்
  • விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

கரூர்

அரவக்குறிச்சி தொகுதி, க.பரமத்தி மேற்கு ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சி, குப்பாகவுண்டன் வலசில், நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை க.பரமத்தி மேற்கு ஒன்றிய செயலாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான

மொஞ்சனூர் இளங்கோ

தொடங்கி வைத்து, கால்நடை மருத்துவ திட்டங்கள், மற்றும் பராமரிப்பு குறித்து மருத்து வர்களிடம் கேட்டறிந்து, மக்களிடம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் க.பரமத்தி வடக்கு ஒன்றிய செய லாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பி னருமான நெடுங்கூர் கார்த்திக் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், கழக நிர்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News