ெரயில்வே கேட் முன்பு லாரி பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- ெரயில்வே கேட் முன்பு லாரி பழுதடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
- பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
குளித்தலை
குளித்தலை-மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் ரயில்வேகேட் மூடுவதால் அதிக அளவில் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுகிறது. இப்பகுதியில் பொதுமக்கள் மேம்பாலம் அமைத்து தர பல முறை கோரிக்கை வைத்தும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் நாக்பூரிலிருந்து மணப்பாறைக்கு ஏற்றி வந்த சரக்கு லாரி ரயில்வே கேட் முன்பு குறுக்கே பழுதடைந்துவிட்டது. இதனால் இரு புறங்களும் வாகனம் செல்ல முடியாத நிலையில் சில மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே போர்க்கால அடிப்படையில் தமிழக அரசோ, மத்திய அரசோ இப்பகுதிக்கு மேம்பாலம் அமைத்து தர சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இனிவரும் காலங்களில் ரயில்வே கேட் மூடுவதால் பல்வேறு உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.