காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு
- தவுட்டுப்பாளையம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
- நீண்ட லாரிகளை இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை
வேலாயுதம்பாளையம்,
சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரைக்கு சுமார் 360 அடி நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை அதிக நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் புதிய பாலம் வழியாக போலீஸ் செக் போஸ்ட் அருகே வந்தது.போலீஸ் செக்போஸ்ட் அருகே செல்லும் போது சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால் போலீஸ் செக்போஸ்ட் அருகே அதிக நீளமான காற்றாலை விசிறி இறக்கையை நீளமான லாரியில் கொண்டு செல்லும் போது காற்றாலை விசிறி இறக்கையுடன் லாரி செல்ல முடியாமல் நீண்ட நேரம் தடுமாறிக் கொண்டு மிகவும் மெதுவாக சென்றது.அதன் காரணமாக மிகவும் நீளமான காற்றாலை இறக்கைகளை லாரிகளில் கொண்டு சென்றதால் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரி ஆற்று பாலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், லாரிகள், கார்கள் ,வேன்கள் இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து காற்றாலை விசிறி ரெக்கை கொண்டு செல்லும் லாரிக்கு பின்னால் வரிசையாக அணிவகுத்து மெதுவாக சென்றன.இதனால் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து பாலத்துறை மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் இறக்கையை ஏற்றி செல்லும் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பகலில் காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றிச் செல்லும் லாரிகள் இரவு 10 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செல்லும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது. பகல் நேரங்களில் வரும்போது அனைத்து வாகனங்களும் நீண்ட நேரம் மெதுவாக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்து காற்றாலை விசிறி இறக்கைகளை ஏற்றி செல்லும் லாரிகளை இரவு 10 மணிக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.