உள்ளூர் செய்திகள்

திருக்காடுதுறையில் - கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2023-11-22 05:43 GMT   |   Update On 2023-11-22 05:44 GMT
  • கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
  • சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.


வேலாயுதம்பாளையம்


கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் சாந்தி தலைமை வகித்து முகாமைதொடங்கி வைத்தார்.கால்நடை பராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் பாஸ்கர், உதவி இயக்குநர் டாக்டர் லில்லி அருள்குமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் டாக்டர் உஷா, டாக்டர் தமிழரசன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாலதி ஆகியோர் கொண்ட கால்நடை மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், சிகிச்சைப் பணிகள், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சை போன்ற பணிகள் மேற்க்கொண்டனர். விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. .சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகளும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பில் சிறந்த மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டது. முகாமில் திருக்காடுதுறை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் ஓட்டி வந்து பயனடைந்தனர்.




Tags:    

Similar News